சலசலப்புக்கு முற்றுப் புள்ளி வைத்த திமுக!

ஜூலை 04, 2019 375

சென்னை (04 ஜூலை 2019): திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்துள்ளார்.

இளைஞரணி செயலாளராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. முரசொலி நிர்வாக இயக்குநராக உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...