பாலியல் மற்றும் சிலை கடத்தல் குற்றச்சாட்டில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!

ஜூலை 04, 2019 282

மதுரை (04 ஜூலை 2019): பாலியல் குற்றச்சாட்டில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன் மீது இந்து சமய அறநிலையத்துறை பெண் உதவி ஆணையர் ஒருவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சதுரகிரி மலைக்கோவிலில் பெண் ஊழியர்களுக்கான ஓய்வறையில் பென் கேமரா வைத்து பச்சையப்பன் ஆபாசமாக படம் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பச்சையப்பன் பாலியல் ரீதியாக இணங்க கட்டாயப்படுத்தியதாகவும் பெண் உதவி ஆணையர் புகாரில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து புகாரின் பேரில் இணை ஆணையர் பச்சையப்பனை மதுரை மாவட்டம் பேரையூரில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் பச்சையப்பனை பேரையூரில் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மதுரை டி.ஐ.ஜி தலைமையில் நடத்த விசாரணையில் அவர் உண்மையை ஒப்பு கொண்டார்.

மேலும் இதனிடையே கடந்த 2014ம் ஆண்டு சதுரகிரி கோவிலில் பலகோடி ரூபாய் மதிப்பிலான விநாயகர் சிலை திருட்டு, முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...