காதல் திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடி மர்ம கும்பலால் படுகொலை!

ஜூலை 05, 2019 342

தூத்துக்குடி (05 ஜூலை 2019): தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த தம்பதி மர்ம கும்பலால் வீடு புகுந்து கொலை செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் வெவ்வேறு சமூகத்தினரான சோலைராஜ் (வயது 24) மற்றும் ஜோதி (வயது 21) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

எனினும், பெற்றோர் எதிர்ப்பினையும் மீறி அவர்கள் திருமணம் செய்து கொண்டு குளத்தூர் சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை அந்த தம்பதியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று அவர்களை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...