வைகோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

ஜூலை 05, 2019 507

சென்னை (05 ஜூலை 2019): வைகோவுக்கு தேசதுரோக வழக்கில் குற்றவாளி என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு ஒராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது அவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக கூறி, ஆயிரம் விளக்கு போலீசார் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி தேச துரோக வழக்கு, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இதனால் வைகோ தாமாக நீதிமன்றத்தில் ஆஜராகி சிறைக்கு சென்று பல நாட்கள் சிறையில் இருந்தார். இதனையடுத்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து மீண்டும் விசாரணை நடைபெற்ற நிலையில் தான் பேசியதை வைகோ ஒப்புக் கொண்டார். இந்நிலையில் வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் தீர்ப்பை நீதிபதி இன்றைக்கு ஒத்திவைத்தார்.

அந்த வகையில் தேசதுரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றவாளி என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு ஒராண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...