மதுரை அருகே கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி!

ஜூலை 05, 2019 337

மதுரை (05 ஜூலை 2019): மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செக்கானூரணி அருகே 3 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை திருமங்கலம் அருகே உள்ள செக்கானூரணியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று இன்று மாலை திடீரென சரிந்து விழுந்தது. இதில் 8 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து அங்கு தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து சென்றனர். இதில் 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 4 பேரை மீட்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காசிநாதன் (35), என்பவர் உயிரிழந்தார்.

கட்டிட விபத்து தொடர்பாக அதன் உரிமையாளர் மாதவன் கைது செய்யப்பட்டு உள்ளார். விசாரணையில், அவர் முதல் தளத்திற்கு மட்டுமே அனுமதி பெற்று 3 தளங்கள் கட்டியது தெரிய வந்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...