ஆந்திரா போலீஸ் பிடியில் மாயமான முகிலன்!

ஜூலை 06, 2019 373

புதுடெல்லி (06 ஜூலை 2019): மாயமான முகிலன் ஆந்திர போலீசார் பிடியில் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காணாமல் போனார். இது குறித்து தமிழக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மேலும் எங்கே முகிலன் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்தது. ஆனால் இதற்கு எந்த பதிலும் இல்லாமல் மர்மமாகவே இருந்தது.

இந்நிலையில் முகிலனின் பள்ளித்தோழர் சண்முகம் ஆந்திராவில் உள்ள திருப்பதியில் நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளார். திருப்பதி ரயில் நிலையத்தில் உள்ள முதல் மேடையில் முகிலனை பார்த்ததாக தெரிவித்துள்ளார். தாடி வளர்த்திய படி முகிலன் கோஷமிட்டு சென்றதாக தெரிவித்தார். இதனிடையே அதை உறுதி செய்யும் வகையில், ஆந்திர காவல்துறை பிடியில் முகிலன் இருக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...