தமிழக போலீசாரிடம் முகிலன் ஒப்படைப்பு!

ஜூலை 07, 2019 620

சென்னை (07 ஜூலை 2019): சமூக செயற்பாட்டாளர் முகிலனை ஆந்திர போலீசார் தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் காணாமல் போனதாக கூறப் பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவருடைய பள்ளித் தோழர் தகவல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே முகிலன் ஆந்திர போலீசாரிடம் உள்ளதாக திடீரென நேற்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஆந்திர போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று காட்பாடி ரெயில்வே காவல் நிலையத்திற்கு முகிலன் கொண்டு வரப்பட்டார். பின்னர் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் காட்பாடி சென்றனர். அங்கிருந்த ஆந்திர போலீசார், முகிலனை தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே முகிலனை விடுவிக்கக் கோரி தமிழகம் எங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...