கடத்தலும் பின்னணியும் - முகிலன் பரபரப்பு தகவல்!

ஜூலை 08, 2019 505

சென்னை (08 ஜூலை 2019): சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடத்தப் பட்டதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக மாயமான முகிலன் திடீரென ஆந்திராவில் கைதானதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து ஆந்திர போலீசார் முகிலனை தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முகிலன் கூறுகையில், என்னை கடத்தியது உண்மைதான். இதன் பின்னணியில் ஸ்டெர்லைட் நிர்வாகத்தை தவிர வேறு யார் இருக்க முடியும்?. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடக் கூடாது என என்னை மர்ம நபர்கள் மிரட்டினர். மேலும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் நான் வாய்த் திறக்காமல் இருக்க பேரம் நடத்தப்பட்டது.

இதற்கு நான் பணியாததால் எனக்கு ஏராளமான ஊசிகளை போட்டு துன்புறுத்தினர். என் குடும்பத்தை இல்லாமல் செய்துவிடுவோம் என மிரட்டினர். நான் பல அவமானங்களை சந்திக்க நேரிடும் என்றும் என்னை மிரட்டினர். பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழக மக்களாலேயே நான் இதுவரை உயிரோடு இருந்தேன்." என்றார்.

பிறகு சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட அவரிடம் போலீசார் வாக்குமூலத்தை பெற்றனர். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், நள்ளிரவு 1 மணிக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...