அதெற்கெல்லாம் ஒத்துக்க மட்டோம் - ஓபிஎஸ் திட்டவட்டம்!

ஜூலை 09, 2019 573

சென்னை (09 ஜூலை 2019): நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசை எதிர்த்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, கடந்த 2007-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த மசோதா கிடப்பில் போடப்பட்டது. கிட்டத்தட்ட 27 மாதத்துக்கும் மேலாக ஒப்புதல் வழங்கப்படாமல் இருந்த நீட்தேர்வு மசோதாவை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது கொண்டுவந்தார் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின். அப்போது பேசிய அவர், ``சட்டப்பேரவையின் ஆணிவேரை அசைத்துப்பார்க்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது கூட்டாச்சி தத்துவத்துக்கு எதிரானது. நீட் தேர்வு மசோதாவை நிராகரித்த மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

மத்திய அரசுக்கும் நாடாளுமன்றத்துக்கும் சட்டம் இயற்றும் அதிகாரம் எப்படி உள்ளதோ அதேபோலத்தான் மாநில சட்டப்பேரவைக்கும் அதிகாரம் உள்ளது. சட்டப்பேரவையின் இறையாண்மையே கேள்விகேட்கும் விதமாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்றார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய ஓ.பி.எஸ், `மத்திய அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். முதல்வர் பேசுகையில், ``சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...