மாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது!

ஜூலை 13, 2019 666

நாகை (13 ஜூலை 2019): நாகை அருகே மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட முஹம்மது ஃபைசான் என்பவரை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முஹம்மது ஃபைசன் அவரது ஃபேஸ்புக் போஸ்டில் மாட்டுக்கறி சூப் சாப்பிட்டதாக பதிவிட்டிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த தினேஷ் குமார், அகத்தியன், கனேஷ்குமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் ஃபைசானை கடுமையாக தாக்கியுள்ளனர்.

படுகாயம் அடைந்த ஃபைசன் நாகை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...