உருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்!

ஜூலை 18, 2019 258

சென்னை (18 ஜூலை 2019): தென்காசி, செங்கல்பட்டு என இரு மாவட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளது.

நெல்லையை பிரித்து தென்காசியை தனி மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக்கப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனால், தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரிக்கிறது.

இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு 110 விதியின் கீழ் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்டத்திலிருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டை தனி மாவட்டமாகவும் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், 33 ஆவது மாவட்டமாக விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி என தனி மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தென்காசி, செங்கல்பட்டு என இன்னும் இரண்டு புதிய மாவட்டங்கள் உதயமாகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...