இதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்!

ஜூலை 19, 2019 1120

மதுரை (19 ஜூலை 2019): மதுரை வேலம்மாள் பள்ளியில் கொஞ்சம் லேட்டாக வந்த மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப் படுவதாக புகார் எழுந்துள்ளது.

பல இடங்காளில் கிளைகளை திறந்துள்ள வேலம்மாள் பள்ளி மதுரையிலும் உள்ளது. இங்கு 3 நிமிடம் லேட்டாக வந்த மாணவர்கள் நாள் முழுவதும் கேட்டுக்கு வெளியே வெயிலில் நிற்க வேண்டிய அவலம் நேர்ந்துள்ளது.

நல்ல காசு.. நல்ல படிப்பு.. ஒழுக்கம்.. ரொம்ப கண்டிப்பு.. இதெல்லாம்தான் வேலம்மாள் பள்ளிக்கூடத்தை இந்த அளவுக்கு அசுர வளர்ச்சி பெற வைத்தது. ஆனால் இந்த கண்டிப்பு இப்போது ஓவர் டோஸ் ஆகிவிட்டது.

ஒரு நிமிஷம் லேட்டாக வந்துவிட்டால் கேட் மூடி விடுவார்களாம். கட்டுப்பாடு என்றாலும் அதற்கு ஒரு அளவு வேண்டாமா? நேரம் தவறாமல் வரவேண்டும் என்றால், இப்போதுள்ள காலக்கட்டத்தில், இப்போதிருக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு எப்படி ஒத்துவரும்? என்பது தெரியவில்லை.

ஏற்கனவே வேலம்மாள் பள்ளி மீது பல புகார்கள் உள்ள நிலையில் இது மேலும் பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...