அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உயர்வு!

ஜூலை 20, 2019 380

காஞ்சீபுரம் (20 ஜூலை 2019): காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் 7 பேராக உயர்ந்துள்ளது.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில், அத்திவரதர் கடந்த 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் தினமும் ஒரு பட்டாடையில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார். அத்திவரதரை தரிசிக்க அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், அத்திவரதர் உற்சவத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறலால் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனிறி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...