ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #SaveVAIGAIfromRSS!

ஜூலை 23, 2019 756

மதுரை (23 ஜூலை 2019): மதுரை சந்நியாசிகள் மாநாட்டிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மதுரையில் வைகை கரையில் சந்நியாசிகள் மாநாட்டை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ட்விட்டரில் #SaveVAIGAIfromRSS என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி முதலிடம் பிடித்துள்ளது.

மதுரை நகரில் வரும் 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் 4-ந் தேதிவரை சந்நியாசிகள் மாநாட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்துத்துவா அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு ‘வைகைப் பெருவிழா’ என்ற பெயரில் மதுரை புட்டுத்தோப்பு வைகை கரையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் நிர்வாண சாதுக்களை அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் #SaveVAIGAIfromRSS என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...