பாஜகவின் அடுத்த டார்கெட் தமிழகம்?

ஜூலை 24, 2019 297

பெங்களூரு (24 ஜூலை 2019): கர்நாடகாவில் ஆட்சி கலைந்த நிலையில் அடுத்தது தமிழகத்திலும் ஆட்சி கலைவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில் மாநிலங்களை தன் கைப்பிடிக்குள் கொண்டு வர பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பல பரபரப்புகளுக்கு மத்தியில் கர்நாடக அரசு நேற்று கலைக்கப் பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பாஜக ஆட்சி அமையும் சூழல் அமைந்துள்ளது.

இதனை அடுத்து தமிழகத்திலும் பாஜக காலூன்ற நினைக்கிறது. எனினும் அதிமுக பாஜகவுடன் கைகோர்த்துள்ளதால் இப்போதைக்கு அது நடக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...