அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டைக்கு அதிகாலையில் புதிய பேருந்து வசதி!

ஜூலை 25, 2019 1706

அதிராம்பட்டினம் (25 ஜூலை 2019): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டைக்கு அதிகாலை 5:30 க்கு புதிய அரசு பேருந்து வசதி செய்யப் பட்டுள்ளது.

பொதுவாக பட்டுக்கோட்டைக்கு செல்லும் அதிரை மக்கள் அதிகாலையில் தனியார் பேருந்து ஒன்றை மட்டுமே எதிர் நோக்கி காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது அதற்கு முன்னரே புதிய பேருந்து வசதி ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

அதிரையின் சில முக்கிய பிரமுகர்கள் முயற்சியில் இந்த புதிய பேருந்து வசதியை ஏற்படுத்தியுள்ளனர். அதிரை மக்கள் தனியார் பேருந்துக்கு காத்திருக்காமல் இதனை அதிரை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...