ராமதாஸுக்கு ஸ்டாலின் வாழ்த்து!

ஜூலை 25, 2019 233

சென்னை (25 ஜூலை 2019): பாமக நிறுவனர் ராமதாஸுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: பாமக நிறுவனர் ராமதாசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்கூறிய நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் மூலமாக வாழ்த்து கூறியுள்ளார். அதில் 'பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். “முத்து விழா”-வினைக் கொண்டாடும் அய்யா அவர்கள் சிறப்பான உடல்நலனுடனும், நிறைவான மனவளத்துடனும், நீண்ட காலம் வாழ, வணக்கத்துடன் வாழ்த்துகிறேன்! என பதிவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...