பிரதமருக்கு கடிதம் எதுவும் எழுதவில்லை - இயக்குநர் மணிரத்னம் பல்டி!

ஜூலை 27, 2019 463

சென்னை (27 ஜூலை 2019): குற்றங்களை தடுப்பது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எதுவும் எழுதவில்லை என்று இயக்குநர் மணிரதனம் தெரிவித்துள்ளார்.

பாஜக கடந்த 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிறகு சிறுபான்மையினர் மீதான தாக்குதல் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்த அடாவடி சம்பவங்கள் மக்களிடையே கோபத்தையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. “ஜெய் ஸ்ரீராம்” என்ற பெயரில் இது போன்ற குற்றம் அதிகரித்து வருவதால் நாட்டில் குறிப்பிட்ட சில பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்காக திரைத்துறை. வரலாற்று ஆய்வாளர்கள் என்று 49 பிரபலங்கள் பிரதமருக்கு பொது கடிதம் எழுதி கையெழுத்திட்டுள்ளளதாக செய்தி வெளியானது.

இந்நிலையில் அந்த கடிதத்தில் நான் எதுவும் கையொப்பமிடவில்லை என்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

அந்த மனுவில் திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவையாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் என அனைவரும் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த பட்டியலில் மணிரத்தனம், ஷியாம் பெனகல், அனுராக் காஷ்யப், பினாயக் சென், சோமிதேரா சாட்டர்ஜி, கொங்கொனா சென் சர்மா, சுபா முட்கல், அனுபம் ராய் போன்ற பெரிய பெயர்கள் உள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...