தமிழகத்தில் மாட்டிறைச்சி தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது!

ஜூலை 29, 2019 517

கோவை (29 ஜூலை 2019): மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்வா கும்பலின் தாக்குதல்கள் வட மாநிலங்களில் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், தமிழகத்திலும் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் முகமது பைசான், மாட்டிறைச்சி சூப் சாப்பிடும் போட்டோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த சில இந்துத்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கோவையைச் சேர்ந்த திராவிடர் விடுதலை கழக நிர்வாகி நிர்மல் குமார், தனது ஃபேஸ்புக் பக்கத்தில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தைக் குறிப்பிட்டு, “எங்கெங்கோ இருப்பவர்களை மாட்டுக்கறி சாப்பிட்டால் தாக்குகிறீர்கள். நாங்கள் அடிக்கடி மாட்டுக்கறி சாப்பிடுவதை பதிவிடுகிறோம். முடிந்தால் வாருங்கள்” என்கிற ரீதியில் பதிவிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து, இன்னொரு பதிவில் “மாட்டுக்கறி சாப்பிட்டால் அடித்துக் கொள்வீர்களா? How is it? இந்து மத வெறியர்களே!” எனக் கேட்டுள்ளார். இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த மணி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், கோவை போலீசார் நிர்மல் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தக் கைது நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...