முத்தலாக் சட்ட விவகாரத்தில் விளையாடுகிறதா? அதிமுக!

ஜூலை 30, 2019 283

புதுடெல்லி (30 ஜூலை 2019): முத்தலாக் சட்ட மசோதாவிற்கு மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இவ்விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு கேள்விக் குறியாகியுள்ளது.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்று மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க-வின் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனை தொடர்ந்து நவநீதகிருஷ்ணன் எம்.பி-யும் முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசியுள்ளார்.

கடந்த வாரம், மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் முத்தலாக் தடை மசோதாவிற்கு தேனி தொகுதி எம்.பி.,யும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரு சபைகளிலும் இருவேறு நிலைப்பாட்டில் அதிமுக உள்ளது இச்சட்ட விவகாரத்தில் அதிமுக விளையாடுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...