பாஜகவுக்கு தடை போட்ட அதிமுக!

ஆகஸ்ட் 03, 2019 365

வேலூர் (03 ஜூலை 2019): வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக பிரச்சாரங்களில் ஈடுபடாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் களமிறங்குகிறார். அதிமுக சார்பாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பாக தீப லட்சுமியும் போட்டியிடுகிறார்.

ஆனால் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக அங்கு பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இதற்கிடையே நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதாவிற்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் ஆதரவு கொடுத்ததும், மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்கு அளிக்காமல் வெளிநடப்பு செய்து முத்தலாக் மசோதா நிறைவேற காரணமாக அதிமுக செயல்பட்டது வேலூரில் இருக்கும் முஸ்லீம் மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறுகின்றனர். இதோடு பாஜக தலைவர்களை அழைத்து பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினால் அது இன்னும் பின்னடைவை ஏற்படுத்தும் மற்றும் சிறுபான்மையின மக்களின் வாக்கு கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக பாஜகவிற்கு அதிமுக தலைமை வேலூர் பிரச்சாரத்தில் தடை போட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...