குமாரசாமி அரசியலிலிருந்து விலகல்?

ஆகஸ்ட் 03, 2019 318

பெங்களூரு (03 ஆக 2019): அரசியலில் இருந்து விலக நினைப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., அரசியலில் இருந்து விலகிக்கெள்ள விரும்புகிறேன். நான் எதிர்பாராத விதமாக விபத்து போன்று அரசியலுக்கு வந்தேன். தற்செயலாக முதல்வர் ஆனேன். இருமுறை முதல்வராகும் வாய்ப்பை கடவுள் எனக்கு கொடுத்தார். நான் யாரையும் திருப்திபடுத்த விரும்பவில்லை. 14 மாத ஆட்சி காலத்தில் மாநில வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றினேன். அதில் எனக்கு திருப்தி.

இன்றைய அரசியல் எப்படி போய் கொண்டிருக்கிறது என்பதை கவனித்து வருகிறேன். இது மக்களுக்கு நல்லதல்ல, ஜாதி வெளி அடிப்படையிலானது. அதை என் குடும்பத்தில் கொண்டு வர வேண்டாம். நான் அமைதியாக வாழ விரும்புகிறேன். நான் ஆட்சியில் இருந்த போது நல்லது செய்தேன். மக்களின் மனங்களில் இடம் பெற வேண்டும் என விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...