சென்னை மக்களை மகிழ்வித்த மழை!

ஆகஸ்ட் 04, 2019 218

சென்னை (04 ஆக 2019): கடந்த சில மாதங்களாக வரட்சியால் அவதியுறும் சென்னை மக்களுக்கு இன்று பெய்த திடீர் மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

அத்துடன், அசோக் நகர் சிட்லப்பாக்கம், அண்ணாநகர், வில்லிவாக்கம், பல்லாவரம், எழும்பூர், அண்ணாசாலை, காட்டுப்பாக்கம் என பல்வேறு இடங்களில் இடி முழக்கத்துடன் மழை பெய்தது.

வறட்சியால் துவண்டு போயுள்ள மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...