ஒவ்வொரு மாநிலங்களின் உரிமைக்காக போராடுவோம் - மமதா பானர்ஜி!

ஆகஸ்ட் 07, 2019 258

சென்னை (07 ஆக 2019): ஒவ்வொரு மாநிலங்களின் உரிமைக்காக போராடுவோம் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலையை, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அவர்கள், முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், முதலில் தமிழில் பேசி வணக்கத்தைத் தெரிவித்தர், தொடர்ந்து பேசிய அவர் “அன்பு சகோதரர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இம்மண்ணின் மைந்தனாக திகழ்ந்தவர் கலைஞர் . அவரின் சிலை திறப்பு விழாவில் நான் கலந்துக் கொண்டு சிலையை திறந்து வைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் பெருமைப்படுகிறேன். கழகத் தோழர்களுக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்களின் தலைவர் கலைஞர் அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் நம் நெஞ்சில் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். ஏழை எளிய மக்களுக்காகப் பாடுபட்டவர் கலைஞர். விவசாயிகளுக்காகவும். சிறுபான்மையினர்களுக்காக, கிறிஸ்தவர்களுக்காக பாடுபட்ட மாமனிதராக வாழ்ந்தவர் கலைஞர். அனைத்து சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக போராடியவர் கலைஞர்..

தன்னுடைய நாடு இந்தியாவாக இருந்தாலும் நான் பிறந்தது வங்க நாட்டில். இதேபோல் ஸ்டாலின் அவர்களும் இந்தியாவில் இருந்தாலும், அவர் பிறந்தது தமிழ்நாட்டில். அதுபோல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு அடையாளம் உண்டு. ஒரு உரிமை இருக்கிறது. அந்த உரிமைக்காக நாம் போராடுவோம்.

தமிழக மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஏன் என்றால் மாநில உரிமையை விட்டுக் கொடுக்காத மக்கள். இதைப் போன்று தொடர்ந்து நாம் நம் மாநில உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கலைஞர் மாநில உரிமைகளை தாரைவார்த்துக் கொடுக்ககாமல் போராடியவர். அதேபோன்று இளைஞர்களாகிய நீங்களும் மாநில உரிமைகளையும், நம்முடைய அடையாளத்தையும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் வலிமையுடன் எதிர் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...