தமிழக அமைச்சர் மணிகண்டன் அதிரடி நீக்கம்!

ஆகஸ்ட் 07, 2019 371

சென்னை (07 ஆக 2019): தமிழக அமைச்சர் மணிகண்டனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்து கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி, தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டனை நீக்க கவர்னருக்கு பரிந்துரை செய்தார். இப்பரிந்துரையை ஏற்று, அமைச்சர் மணிகண்டனை நீக்கி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தகவல் தொழில் நுட்பத் துறையை, வருவாய் துறை அமைச்சராக உள்ள ஆர்.பி.உதயகுமார் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் மணிகண்டனை நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...