வேலூர் தேர்தல் முடிவுகள்: அதிமுக, திமுகவிடையே இழுபறி நிலை!

ஆகஸ்ட் 09, 2019 290

வேலூர் (09 ஆக 2019): வேலூரில் அதிமுக முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. துவக்கத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடும் போட்டி நிலவியது.

காலை 10 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மீண்டும் முந்தினார். தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி அவர் 49 87 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.

ஏ.சி.சண்முகம் 85200 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 77467 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 3950 வாக்குகளும் பெற்றிருந்தனர். ஏ.சி.சண்முகம் 7733 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். நோட்டாவுக்கு 1461 வாக்குகள் கிடைத்திருந்தன.

அடுத்த சுற்றிலும் ஏ.சி.சண்முகம் தொடர்ந்து முன்னிலை வகித்தார். ஒருகட்டத்தில் திமுக வேட்பாளரை விட ஏ.சி.சண்முகம் 13250 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...