வேலூரில் திமுக வெற்றி முகம் - திமுகவினர் கொண்டாட்டம்!

ஆகஸ்ட் 09, 2019 372

வேலூர் (09 ஆக 2019): வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெரும் நிலையில் உள்ளது.

வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆரம்பத்திலிருந்து திமுக அதிமுக இடையே இழுபறி நிலை நீடிக்கிறது.

இந்நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்தை விட 8500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இன்னும் குறைந்த வாக்குகளே எண்ண வேண்டியது உள்ளதால் திமுக வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...