முதல்வர் எடப்பாடி ரொம்ப பிஸி - ஸ்டாலின் கிண்டல்!

ஆகஸ்ட் 14, 2019 266

சென்னை (14 ஆக 2019): முதல்வர் ரொம்ப பிஸியாக இருப்பதால் நீலகிரி மழை வெள்ளத்தை பார்க்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரமில்லை என்று முக ஸ்டாலின் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, லண்டன் போகும் முயற்சியில் உள்ளதால் அந்த ஏற்பாட்டில் தீவிரமக உள்ளார். அதனால் தான் நீலகிரி மாவட்ட மழை சேதத்தை பார்வையிட அவர் வரவில்லை. இதற்கெல்லாம் போக அவருக்கு நேரம் இருக்காது என்று நான் கருதுகிறேன். என்று கிண்டலாக தெரிவித்தார்.

மேலும் இன்றைக்கு ஆளும் கட்சி செயல்படாமல் இருக்கிறது. ஓரளவு ஆட்சியை செயல்பட வைப்பதற்கு தி.மு.க. தான் துணை நிற்கிறது. அதுதான் இன்று உள்ள உண்மை நிலை." என்றார்.

முன்னதாக கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு உதவ சென்னையில் இருந்து நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டு அறிவாலயம் கொண்டு வரப்பட்ட நிலையில், சென்னை மேற்கு மாவட்டம், வடக்கு, கிழக்கு, தெற்கு மாவட்டங்கள் மற்றும் பல்லாவரம் எம்.எல்.ஏ. சார்பிலும் திரட்டப்பட்ட மொத்தம் ரூ.72 லட்சம் மதிப்பிலான பொருட்களை மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து கேரளாவுக்கு அனுப்பி வைத்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...