மூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்!

ஆகஸ்ட் 15, 2019 304

சென்னை (15 ஆக 2019): வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

இன்று நாட்டின் 73-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர தின உரையாற்றினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அப்பொழுது பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடங்காகக் கொண்டு வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும் என தனது சுதந்திர தின உரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும் மொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்க கூடாது என்ற கொள்கையில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியை திணிக்க எடுக்கப்படும் முயற்சியை முறியடிப்பதில் உறுதியாக உள்ளோம். என்றார்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...