மதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி!

ஆகஸ்ட் 16, 2019 498

மதுரை (16 ஆக 2019): மதுரை அருகே மதம் மாறிய குடும்பங்களை ஊர் மக்கள் சித்ரவதை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசித்த சிலர் 35 ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாறியுள்ளனர். இவர்களை தொடர்ந்து தற்போது சிலர் மதம் மாறத்தொடங்கியுள்ளனர்.

இதனால் இரண்டு தரப்புகளுக்கும் இடையே மோதல் ஏற்படத்தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும், மதமாற்றம் செய்து கொண்ட 30 குடும்பங்கள், ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பேசிய வருவாய் வட்டாட்சியர், இந்த பிரச்சனைக்கு வரும் 21-ஆம் தேதி நடைபெறும் சமாதானக் கூட்டத்தில் தான் தீர்வுக்காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...