மகிழ்ச்சியில் சென்னை மக்கள்!

ஆகஸ்ட் 17, 2019 334

சென்னை (17 ஆக 2019): சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்வதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கிண்டி , அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பலத்த மழை பெய்து வருகிறது. போரூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...