2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது!

ஆகஸ்ட் 18, 2019 189

கோட்டார் (18 ஆக 2019): கன்னியாகுமரி கோட்டரில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரமேஷ் என்பவர் திரையரங்கம் ஒன்றில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் அந்த ரூபாய் நோட்டின் மீது திரையரங்க ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து இது தொடர்பாக திரையரங்க ஊழியர்கள் கோட்டார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

உடன் அங்கு வந்த போலீசார் பணத்தைக் கைபற்றி ஆய்வு செய்ததில் அது கள்ள நோட்டு என தெரியவந்தது. இதனை அடுத்து ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப் பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுவரை எவ்வளவு ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன என்று விசாரித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...