வைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி!.

ஆகஸ்ட் 19, 2019 308

சென்னை (19 ஆக 2019): மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ உடல் நிலைநிலை பாதிக்கப்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஸ் செய்யப்பட்டார்.

இதனையடுத்து மதுரையிலிருந்து வைகோ சென்னைக்கு வரும்போது, யாரும் அன்பின் மிகுதியால் பார்க்க வேண்டும் எனவும் போனில் தொடர்புகொள்ள வேண்டும். வைகோ நல்ல உடல் நிலையில் இருக்கிறார் எனவும் மதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் மதுரை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் வைகோ சென்னைக்கு வந்தார். அப்போது மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. எனவே அவர் தற்போது போரூரில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...