சிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்து!

ஆகஸ்ட் 19, 2019 382

திருச்சி (19 ஆக 2019): திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி மீது சீலிங் ஃபேன் விழுந்து சிறுமிக்கு காயம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியில் பெரிய அரசு மருத்துவமனை 100 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் திருவரம்பூர் சர்க்கார் பாளையத்தை சேர்ந்த அனு ஜெயஸ்ரீ என்கிற மாற்றுத்திறனாளி சிறுமி உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை உடனிருந்து பார்த்து வந்த தாய் ஜேம்ஸ் மேரி தன் மகளுக்கு உணவு ஊட்டி விட்டுக் கொண்டிருந்த போது அங்கு உள்ள சீலிங் ஃபேன் கழன்று சிறுமி தலையில் விழுந்து விட்டது. இதனால் சிறுமியின் தலை பெரிய அளவில் வீங்கி உள்ளது. பணம் கட்டினால் தான் ஸ்கேன் எடுக்க முடியும் என நிர்வாகம் கறாராக சொல்லி விட்டது.

பணம் இல்லாதவர்களுக்குதான் அரசு மருத்துவமனை. அதிலும் அங்கே ஃபேன் விழுந்து ஏற்பட்ட காயத்திற்கு கூட அரசு மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...