தமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு!

ஆகஸ்ட் 20, 2019 327

சென்னை (20 ஆக 2019): பால் விலை உயர்வை அடுத்து டீ மற்றும் காபி விலையை உயர்த்த டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

ஆவின் பாலை தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தியுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் டீ, காபி விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டீக்கடைக்காரர்கள் சென்னையில் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் பேசிய சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்க தலைவர் ஆனந்தன், பல டீ கடைகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்நிலையில், பால் விலை உயர்வு அதிருப்தி அளிக்கிறது.

இதனால் டீ, காபி விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன்படி டீ, காபி விலையை 2 ரூபாய் அளவில் உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இந்த விலை உயர்வால் வியாபாரம் பாதிக்கப்படுமா என்ற அச்சமும் உள்ளது என்றும் கவலை தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...