பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக!

ஆகஸ்ட் 20, 2019 442

புதுடெல்லி (20 ஆக 2019): காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக திமுக அறிவித்துள்ள போராட்டம் பாகிஸ்தான் வரை வைரலாகியுள்ளது.

காஷ்மீருக்கு இருந்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது, மேலும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது.

காஷ்மீர் குறித்து மத்திய அரசு எடுத்த முடிவை திமுக கடுமையாக எதிர்க்கிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக டெல்லியில் திமுக எம்பிக்கள் எல்லோரும் சேர்ந்து ஜந்தர் மந்தரில் வரும் 22 ஆம் தேதி போரட்டம் அறிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் எதிர்கட்சிகளை சேர்ந்த எம்பிக்களுக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் போராட்டத்தில் கலந்துக்கொள்வதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்த போராட்டம் குறித்த தகவல் பாகிஸ்தான் வரை சென்றுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ அரசு ரேடியோ தனது டிவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியான திமுக, காஷ்மீர் பிரிவினைக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்துகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...