வேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ!

ஆகஸ்ட் 22, 2019 449

வேலூர் (22 ஆக 2019): இறந்த தலித் சமூகத்தை சேர்ந்தவரின் உடலை எடுத்துச் செல்ல ஆதிக்க சாதியினர் தடை விதித்ததால் உடலை பாலத்திலிருந்து கட்டி இறக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அருகே இற்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரின் உடலின் இறுதிச் சடங்கிற்காக சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும்போது, அப்பகுதியின் மற்றொரு வகுப்பினர் அந்த உடலை அப்பகுதி வழியே எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளனர். மேலும் உடலை எடுத்துச் செல்ல வேறு வழியில்லாததால் இறந்தவரின் குடும்த்தினர் திக்குத் தெரியாமல் தவித்தனர்.

இதனை அடுத்து உடலை கொண்டு சென்ற உறவினர், அங்கிருந்த பாலத்திலிருந்து உடலை கயிறு மூலம் கட்டி இறக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

21 ஆம் நூற்றாண்டிலும் இந்த சாதிக் கொடுமையை அழிக்க முடியவில்லையே என்பதுதான் வேதனை .

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...