தமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்திப்பு!

ஆகஸ்ட் 22, 2019 461

தேனி (22 ஆக 2019): திமுக பொருளாளர் துரை முருகனுடன் அதிமுக எம்பியும் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுமான ரவீந்தரநாத் குமார் சந்தித்துப் பேசிய சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தாலும், தமிழகத்தில் அந்த கூட்டணியில் இருந்த அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வென்றது.

தேனி மக்களவைத் தொகுதியில் துணைமுதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் தாகூர் அதிமுக சார்பில் வெற்றி பெற்று மக்களவையில் எம்பியாக பதவியேற்றார்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் சட்டமன்ற ஆய்வுக்குழு கூடியது. இந்தக் கூட்டத்தின் தலைவரான துரைமுருகன் கலந்துகொண்டார். அத்துடன் ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினரான டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடி எம்எல்ஏவுமான டி.ஆர்.பி ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

அதிமுகவின் சார்பில் அத்தொகுதி எம்பி ரவீந்தரநாத் குமார் பதவியேற்றார். அப்போது துரைமுருகனிடம் , ரவீந்தரநாத்குமார் மகிழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்க்கட்சியில் இருந்தாலும், தன்னுடன் இப்படி பேசுகிறாரே என்று நெகிழ்ந்த ரவீந்தரநாத் அவருக்கு அன்பு மிகுதியால் ஒரு சால்வை அணிவித்தார். அதற்கு துரைமுருகன் ரவீந்தரநாத்தை மனதார வாழ்த்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...