தமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு!

ஆகஸ்ட் 23, 2019 280

கோவை (23 ஆக 2019): தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை தமிழக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.

நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து மாறுவேடத்தில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும், மற்ற 5 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் உளவுத்துறை கூறி உள்ளது.

உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் காவல் ஆணையாளர்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான படகுகளை கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி நேற்று இரவு முதலே அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...