காஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

ஆகஸ்ட் 25, 2019 322

ஸ்ரீநகர் (25 ஆக 2019: காஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி அரவிந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 33). மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவு(சி.ஆர்.பி.எப்.) துணை தளபதியான இவர் காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார்.

விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் கடந்த 14-ந்தேதி மீண்டும் காஷ்மீருக்கு திரும்பினார். அவரது மனைவியும அவருடனே உள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தங்கி இருந்த வீட்டில் அரவிந்த் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

2014-ம் ஆண்டு நேரடியாக சி.ஆர்.பி.எப்.பில் அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், 40-வது பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வந்தார்.

அரவிந்த்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...