ரெயிலில் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிடிஆருக்கு சரமாரி அடி உதை!

ஆகஸ்ட் 25, 2019 300

திருச்சி (25 ஆக 2019): ரெயிலில் பயணம் செய்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகரை சக பயணிகள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னை பெரும்பாக்கத்தை சார்ந்தவர் முல்லை செல்வராஜ். இவர் கடந்த 22- ஆம் தேதி ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் குடும்பத்துடன் சென்றார். இந்த ரயிலில் திருச்சி கருமண்டபத்தில் சேர்ந்த தன்ராஜ் என்பவர் ரயில் டிக்கெட் பரிசோதராக டிடி பணியில் இருந்தார். இவர் பணியில் இருந்த போது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ரயில்வே சந்திப்பை கடந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்தது. அப்போது டாக்டருக்குப் படிக்கும் செல்வராஜின் மகள் ரயிலில் பயணம் செய்த போது தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி கொண்டு இருந்தார். ரயிலில் இருந்த பெரும்பாலான தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த இளம் பெண்ணிடம் சென்று செல்போனை பறித்து தவறாக நடக்க முயன்றிருக்கிறார் டிடி அதிகாரி தன்ராஜ். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சத்தம் போட்டிருக்கிறார். இதையடுத்து தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினர் மற்றும் பெட்டியில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து தன்ராஜை பிடித்து சரமாரியாக தாக்கினர். ரயில் காரைக்குடி சென்றவுடன், இதுகுறித்து ரயில்வே காவல்துறையிடம் செல்வராஜ் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், திருச்சி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து ரயில்வே காவல் துறைக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து டிடி தன்ராஜ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...