வைகோ மீது திமுக வழக்கு - பறிபோகுமா வைகோ பதவி?

ஆகஸ்ட் 26, 2019 363

சென்னை (26 ஆக 2019): வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

2006ல் திமுக சார்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் மதிமுக கட்சியை திமுக உடைக்க பார்க்கிறது.

மதிமுகவினருக்கு பணம் கொடுத்து கருணாநிதி எங்கள் தொண்டர்களை திமுக பக்கம் இழுக்கிறார். இதனால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக சார்பாக மனு கொடுக்கப்பட்டது. வைகோ அளித்த இந்த மனு அப்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு கடந்த 13 வருடங்களாக எம்பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று காலை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்திய தண்டனை சட்டத்தின் அவதூறு பரப்புதல் சட்டப்பிரிவு, 499 மற்றும் 500 கீழ் இரண்டு வருடம் வரை அதிகமாக தண்டனை வழங்க முடியும். இதனால் இந்த வழக்கில் இன்று வைகோவிற்கு இரண்டு வருடம் தண்டனை கிடைத்தால் அவரின் ராஜ்ய சபா எம்பி பதவி பறிபோகும். திமுக மூலம்தான் தற்போது வைகோ எம்பியாக இருக்கிறார். அவர்கள் மூலமே வைகோ பதவி பறிபோகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...