இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்ள விரும்பும் இந்து பெண்ணுக்கு முழு அனுமதி அளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஆகஸ்ட் 26, 2019 875

மதுரை (26 ஆக 2019): இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்ள விரும்பும் பெண்ணுக்கு முழு சுதந்திரம் அளிக்கப் பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

27 வயது நிரம்பிய பல் மருத்துவரான இந்து பெண் இஸ்லாம் மத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்பினார். ஆனால் அவரது பெற்றோர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அந்த பெண் ஜம்யித்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பை தொடர்பு கொண்டு அடைக்கலம் கேட்டார். ஆனால் அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்து பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்ற கோரினர்.

இந்நிலையில் பெண் மதம் மாற விரும்புவதற்கு எதிராக பெண்ணின் பெற்றோர் நீதிமன்றத்தை நாடினர். ஆனால் இதுகுறித்து விசாரனை மேற்கொண்ட நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி புகழேந்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், "பெண்ணின் விருப்பப்படி இஸ்லாம் மதத்தை ஏற்று பின்பற்றலாம் என்றும், அவரவர் விரும்பும் மதத்தை ஏற்றுக் கொன்டு செயல்பட சட்டம் அனுமதிக்கிறது என்பதால் அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...