சென்னையில் ராணுவ அதிகாரி சுட்டுக் கொலை!

ஆகஸ்ட் 27, 2019 255

சென்னை (27 ஆக 2019): சென்னை பல்லாவரத்தில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பல்லாவரத்தில் நேற்று நள்ளிரவில் ஹவில்தார் பிரவீன் குமார் ஜோஷிக்கும் ரைஃபிள் மேன் ஜெகஷஷீர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஹவில்தார் பிரவீன் குமாரை சுட்டுக் கொலை செய்துவிட்டு ரைஃபிள் மேன் ஜெகஷஷீர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...