லண்டனில் எடப்பாடி போய் சேர்ந்ததும் விமான நிலையத்தில் எதிர் பாராத ஷாக்!

ஆகஸ்ட் 29, 2019 568

லண்டன் (29 ஆக 2019): லண்டனில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போய் சேர்ந்ததும் விமான நிலையத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் பழனிச்சாமி முதல்முறையாக மூன்று நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மொத்தம் 14 நாட்கள் அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக நேற்று காலை அவர் சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் முதல்வருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அவர்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை தமிழகத்தில் நுழையவிட்டது ஆகியவற்றை கண்டித்தும் தமிழக அரசுக்கு எதிராக பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் செய்தனர்.

முதல்வரையும், சுகாதாரத்துறை அமைச்சரையும் வரவேற்க சிலர் காத்திருந்தனர். எல்லா பயணிகளும் வெளியேறிய பின் முதல்வர் கடைசியாக அங்கு வந்தார். முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சரும் வேறு மாற்று வழியில் தனியாக அழைத்து செல்லப்பட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...