தங்க தமிழ் செல்வனுக்கு அடித்தது லக்கி பிரைஸ்!

ஆகஸ்ட் 30, 2019 251

சென்னை (30 ஆக 2019): திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ் செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி சிவா, ஆ,ராசா உடன் இணைந்து தங்க.தமிழ்ச்செல்வனும் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுவார்.

வி.பி.கலைராஜன் இலக்கிய அணி இணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். திமுக நெசவாளர் அணி செயலாளராக கே.எம்.நாகராஜன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் சற்று முன்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் திமுக கொள்கைப்பரப்பு செயலாளர்களாக பணியாற்றிவரும் ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோருடன் தங்க.தமிழ்ச்செல்வனும் கொள்கைப்பரப்பு செயலாளராக பணியாற்றுவார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில் வி.பி.கலைராஜன் திமுகவின் இலக்கிய அணி இணை செயலாளராக செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோன்று நெசவாளர் அணி செயலாளராக நாகராஜன் என்பவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...