பால கவுதமன் மீது தேச விரோத வழக்கு - வழக்கறிஞர் புகார்!

ஆகஸ்ட் 30, 2019 2766

கரூர் (30 ஆக 2019): சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசிய பால கவுதமன் மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து கரூர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், "சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பால கவுதமன், இந்திய நாட்டை அகன்ற இந்து ராஷ்டிரமாக மாற்ற வேண்டும். இந்துக்கள் ஒன்று பட்டு இதனை செய்ய வேண்டும்" என்று பேசியுள்ளார். இது அனைத்து மத சமூக மக்கள் வாழும் இந்திய நாட்டு ஒருமைப்பட்டிற்கு எதிரானதாகும். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி உள்ளன. இது தேச விரோத குற்றமாகும் எனவே இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 124ஏ, 125 மற்றும் 153ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...