தமிழக பாஜக தலைவர் பதவி இவருக்கா? - கசிந்த தகவல்!

செப்டம்பர் 03, 2019 680

சென்னை (03 செப் 2019): தமிழக பாஜகவின் புதிய தலைவராக கட்சியின் மாநில துணை தலைவரும், மூத்த நிர்வாகியுமான குப்புராமு தேந்தெடுக்கப்படலாம் என்ற தகவல் கசிந்துள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதை அடுத்து, மாநில தலைவர் பதவிக்கு புதியவர் ஒருவரை நியமிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

அந்த வகையில் தமிழக பாஜகவிற்கு அடுத்த தலைவராக முன்னாள் தலைவராக இருந்த பொன், ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச். ராஜா, சி.பி ராதா கிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் என்று பலரும் தலைவர் பொறுப்பை கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் மூத்த நிர்வாகியுமான குப்புராமு தேந்தெடுக்கப்படலாம் என்ற தகவல் கசிந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...