தமிழக அரசியலில் திடீர் திருப்பம் - பாஜக தலைவராகும் ரஜினி?

செப்டம்பர் 03, 2019 631

புதுடெல்லி (03 செப் 2019): தமிழக பாஜக தலைவராக ரஜினியை நியமிக்க பாஜக தலைமை ரஜினியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப் பட்ட நிலையில் தமிழக பாஜக தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ரஜினி பாஜகவின் அனுதாபியாகவும், அவ்வப்போது பாஜக திட்டங்களை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது காலியாக உள்ள தமிழக பாஜக தலைவர் பதவிக்கு ரஜினியை நியமிக்க அமித்ஷா தூது விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் ரஜினி இதுவரை இதுகுறித்து வாய் திறக்கவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...