விநாயகர் ஊர்வலத்திற்கு வசூல் செய்ததில் வாக்குவாதம் - இளைஞர் படுகொலை!

செப்டம்பர் 03, 2019 460

லால்குடி (03 செப் 2019): விநாயகர் ஊர்வலத்திற்கு வசூல் செய்தபோது நண்பர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சீனிவாசபுரத்தை சேர்ந்த பார்த்த சாரதி (20) தினேஷ்குமார் (23) நண்பர்கள். இவர்களும் சில நண்பர்களும் விநாயகர் ஊர்வலத்திற்காக வீடுவீடாக பணம் வசூல் செய்துள்ளனர்.

அப்போது ஒரு வீட்டில் பணம் இல்லை என்று கூறியுள்ளனர். இதற்கு பார்த்தசாரதி வீட்டில் உள்ளவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை தினேஷ்குமார் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு விநாயகர் சிலைக்கு தினேஷ்குமார், பார்த்தசாரதி உள்ளிட்டோர் பாதுகாப்புக்காக இருந்துள்ளனர். அப்போது மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தினேஷ்குமார் பார்த்த சாரதியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பார்த்தசாரதி பரிதாபமாக உயிரிழ்ந்தார். இதனை அடுத்து போலீசார் தினேஷ்குமாரை கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...